ஆயிரம் கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்தது ‘ஆர்.ஆர்.ஆர்’

ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (14:30 IST)
பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’
 
இந்த படத்தின் வசூல் ஒரே நாளில் 100 கோடிக்கும்  மேலாகவும், மூன்று நாளில் 200 கோடியும் ஒரு வாரத்தில் 500 கோடி வசூலை குவித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது 1000 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது 
 
உலகம் முழுவதும் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் 
 
இதனைஅடுத்து இந்திய திரை உலகில் ‘ஆர்.ஆர்.ஆர்’படத்தின் வசூல் பெரும் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்த நிலையில் தற்போது அவரது மற்றொரு படமும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்