நாடு முழுவதும் மக்கள் இந்தி பேச, படிக்க வேண்டும் என்ற நிலைபாட்டில் பாஜக அரசு தீவிரமாக உள்ளது. எனினும் பல மாநிலங்களில் இந்தி திணிப்பால் தாய் மொழி அழியும் அபாயம் உள்ளதாக பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழி நெகிழ்வடையாத நிலையில் அது பரவாது. அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வரும் நிலையில் ஆஸ்கர் நாயகர கன் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பகக்த்தில் தமிழணங்கு என்ர பெயரில்ஒரு ஓவியத்தைத் தன் டுவிட்டர் பக்கத்திலும் இன்ஸ்டாலுலும் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தில், இன்பத் தமிழ் எங்கள் உரிமைசெம் பயிருக்கும் வவேர் என்ற பாரதிதாசனின் வரிகள் இடம்பெற்றுள்ளதது. இந்த ஓவியத்தை சந்தோஷ் நாராயணன் வரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.