ஆர்.கே.சுரேஷின் அடுத்த படம் ரிலீஸ் குறித்த தகவல்!

வெள்ளி, 29 ஜனவரி 2021 (08:01 IST)
ஆர்.கே.சுரேஷின் அடுத்த படம் ரிலீஸ் குறித்த தகவல்!
பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் ’தாரை தப்பட்டை’ என்ற படத்தில் அறிமுகமான ஆர்கே சுரேஷ் அதன்பின்னர் பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் கதாநாயகன் கேரக்டரில் நடித்து வந்தார் 
 
இந்த நிலையில் தற்போது அவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் வேட்டைநாய். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்துள்ள நிலையில் இந்த படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இயக்குனர் ஜெய்சங்கர் இயக்கிய இந்தப் படத்திற்கு ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு கணேஷ் சந்திரசேகரன் என்பவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்கே சுரேஷ் ஜோடியாக சுபிக்‌ஷா நடித்திருக்கும் இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படம் ஆர்கே சுரேஷ் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் என்றும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்