விஷாலின் ‘சக்ரா’ தீம் மியூசிக் ரிலீஸ்: இணையத்தில் வைரல்!

வியாழன், 28 ஜனவரி 2021 (17:20 IST)
நடிகர் விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படம் முதலில் ஓடிடியில் ரிலீஸாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ‘சக்ரா’ படத்தின் டீசர் உடன் கூடிய தீம் மியூசிக்கை சற்று முன்னர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அட்டகாசமான விஷாலின் ஆக்ஷன் காட்சிகளுடன் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை அதகளப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த டீஸருக்கு ரசிகர்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
விஷால் ஷ்ராதா ஸ்ரீநாத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்