ராதாரவியை அடுத்து பிரபல வில்லன் நடிகருக்கும் பாஜகவில் பதவி

வியாழன், 16 ஜூலை 2020 (08:39 IST)
தமிழக பாஜக தலைமை பதவியேற்ற எல்.முருகன் அவ்வப்போது புதிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறார். புதிய மாநில துணை தலைவர்கள், பொது செயலாளர்கள், பொருளாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர்களின் பட்டியல் சமீபத்தில் வெளிவந்தது
 
மாநில செயற்குழு உறுப்பினர்களாக நடிகைகள் நமீதா, கௌதமி, குட்டி பத்மினி மற்றும் மதுவந்தி ஆகியோர்  தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியையும், செயற்குழு உறுப்பினர்களாக நடிகர் ராதாரவி, கங்கை அமரன், கஸ்தூரி ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பிரபல வில்லன் நடிகர் ஆர்கே சுரேஷ், இயக்குனர் பேரரசு மற்றும் இசையமைப்பாளர் தீனா ஆகியோர்களுக்கான பதவி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது
 
நடிகர் ஆர்.கே. சுரேஷ் மாநில ஓபிசி அணி மாநில துணை தலைவர் மற்றும் இயக்குனர் பேரரசு இசை அமைப்பாளர் தீனா ஆகியோர் பாஜக கலை கலாச்சார பிரவு மாநில செயலாளர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
இதுகுறித்து ஆர்கே சுரேஷ் தனது டுவிட்டரில் கூறியதாவது: இனிய நன்னாளில்,,என் அன்பு உள்ளங்களுக்கு நற்செய்தி,, எம்மை தமிழ்நாடு மாநில பா.ஜ.க வின்,, ஓபிசி பிரிவு துனணத்தலைவராக நியமித்து அறிவித்த பெருமைமிக்க எல்.முருகன் மற்றும் பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா ஆகியோர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்

இனிய நன்னாளில்,,என் அன்பு உள்ளங்களுக்கு நற்செய்தி,, எம்மை தமிழ்நாடு மாநில பா.ஜ.க வின்,, OBCபிரிவு துனணத்தலைவராக,,நியமித்து...,அறிவித்த பெருமைமிக்க..@Murugan_TNBJP @PMOIndia @AmitShah என் நெஞ்சார்ந்த நன்றிகள். pic.twitter.com/sb87ZeUlhO

— RK SURESH (@studio9_suresh) July 15, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்