பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம்! ஊடகங்களுக்கு ரித்விகா வேண்டுகோள்

புதன், 23 ஜனவரி 2019 (07:23 IST)
கடந்த சில நாட்களாக ஒருசில ஊடகங்களில் நடிகை ரித்விகாவுக்கு திருமணம் என்று அவரே பேட்டி அளித்ததாக செய்திகள் வெளிவந்தது. இந்த ஆண்டு ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள போவதாகவும், திருமணத்திற்கு பின் தனது வருங்கால கணவர் அனுமதித்தால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் பரவின

ஆனால் ஒரு குறிப்பிட்ட ஊடகத்தின் இந்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்காட்டிய நடிகை ரித்விகா, 'இதுபோன்ற பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம்' என்று கூறியுள்ளார். மேலும் இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணத்தில் அவர் இல்லை என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

பா.ரஞ்சித் தயாரித்து வரும் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும்  ரித்விகா, நான்கு தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார். அவர் அடுத்த ஆண்டு இறுதிவரை கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Fake news, don't spread fake news https://t.co/FmevEDevL6

— Riythvika✨ (@Riythvika) January 22, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்