திருமணம் இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகள் வரைதான் இருக்கும் - வைரமுத்து

திங்கள், 21 ஜனவரி 2019 (18:56 IST)
ஆட்டோகிராப், பாண்டவர் பூமி, வெற்றி கொடிகட்டு போன்ற படங்களை இயக்கியவர் சேரன். இவர் தற்போது திருமணம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் தம்பிராமையாவின் மகன் நடித்துள்ளார். 
இப்படத்தில் இசைவெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது : ’திருமணம் என்பது சமீபகாலத்து நாகரிகம் தான். ஆணுக்கும் பெண்ணுக்குமாக பந்தமே இது . இந்த திருமணம் என்ற முறையில் தாலி வந்தது எல்லாம்  3000 வருடங்களில் தான் இருக்கும். திருமண பந்தம் என்பது இன்னும் 50 அல்லது 100 வருடங்கள் வரைதான் இருக்கும். திருமணம் தனது  கடைசி சுவாசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’ இவ்வாறு பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்