காந்தாரா படம் பெற்ற பெருவெற்றிக்குப் பிறகு தற்போது இரண்டாம் பாகம் காந்தாரா-1 உருவாகி ரிலீஸாகவுள்ளது. படத்துக்கு காந்தாரா –சேப்டர் 1 எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த படத்தில் காந்தாரா தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்பட்டுள்ளது.
இது சம்மந்தமான பேச்சில் “காந்தாரா முதல் பாகத்துக்காக 2 ஆண்டுகளும், இரண்டாம் பாகத்துக்காக 3 ஆண்டுகளும் கடுமையாக உழைத்தேன். இந்த வருடங்களில் என் குடும்பத்தையும் குழந்தைகளையும் சரியாகக் கவனிக்க முடியவில்லை. படப்பிடிப்பின் போது மூன்று, நான்கு முறை மரணத்தின் அருகே சென்றுவந்தேன். தெய்வத்தின் உதவியால்தான் நான் இப்போது உங்கள் முன் இருக்கிறேன். இந்த டிரைலர் ஒரு சிறு முன்னோட்டம்தான். முழு அனுபவமும் திரையரங்கில் உங்களுக்காகக் காத்திருக்கிறது.” எனப் பேசியுள்ளார்.