தனுஷ் படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன்… ஹாலிவுட் நடிகர் டிவீட்!

வியாழன், 27 மே 2021 (16:19 IST)
தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை மிகவும் எதிர்பார்ப்பதாக அந்த படத்தில் நடித்துள்ள ஜேம்ஸ் காஸ்மோ தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் ஜூன் மாதம் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படம் பற்றி டிவீட் செய்துள்ள ஜேம்ஸ் காஸ்மோ ‘இந்த படத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் இந்திய கலாச்சாரத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஜேம்ஸ் காஸ்மொ கேம் ஆஃப் த்ரோன்ஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்