இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் இரவு 10.30 மணியளவில் பயணிகள் சிலர் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் முத்து என்பவர் உணவகத்தை மூட சொல்லியதுடன், உணவருந்தி கொண்டிருந்தவர்களையும் லத்தியால் தாக்கியுள்ளார். இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் வைரலானதுடன், உணவக உரிமையாளரும் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், இரவு 11 மணியைத் தாண்டி உணவகங்கள் செயல்படக்கூடாது என்பதே அரசின் ஆணை. கோவை காந்திபுரத்தில், பத்தரை மணிக்கு முன்னதாகவே போலீஸ் ஓர் உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தோரைத் தாக்குகிறது. சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? பதிலளிக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை எனத் தெரிவித்துள்ளார்.