நடிகர் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் 'சர்வம் தாள மயம்'. ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்தை மின்சாரக்கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராஜிவ் மேனன் இயக்கியிருக்கிறார்.
நெடுமுடி வேணு, வினித் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ராஜிவ் மேனனின் மைண்ட்ஸ்கிரீன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், சர்வம் தாள மயம் திரைப்படம் வரும் 28ம் தேதி வெளியாவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.