பொங்கல் பண்டிகையொட்டி வெளியான விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானதுடன் வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. எனவே மற்ற நடிகர்களும் தங்களின் படங்களை தியேட்டரில் வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலை களத்தில் சந்திப்போம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.
ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்த இந்த படம் ஜனவரி 28ஆம் தேதி தைப்பூச தினத்தில் வெளியிட உள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனால் ஜீவா மற்றும் அருள் நிதியின் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இந்நிலையில் களத்தில் சந்திப்போம் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது பிப்.,5 ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜீவாவின் தந்தையும் சூப்பர்குட் நிறுவனவர் ஆர்.பி.சவுத்திரியின் 90ஆவது தயாரிப்பான இந்த படத்தில் மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் ராஜசேகர் என்பவர் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும்