தோல்வியில் இருந்து மீண்ட கார்த்தி

செவ்வாய், 21 நவம்பர் 2017 (10:29 IST)
கடைசியாக இரண்டு தோல்விப் படங்களைக் கொடுத்த கார்த்தி, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் மூலம் அதிலிருந்து  மீண்டுள்ளார்.

 
‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கார்த்தி, இந்த பத்து வருடங்களில் பதினைந்து படங்களில்  மட்டுமே நடித்துள்ளார். வெற்றி, தோல்வி என மாறி மாறி சந்தித்து வந்த கார்த்திக்கு, கடைசியாக வெளியான ‘காஷ்மோரா’  மற்றும் ‘காற்று வெளியிடை’ இரண்டு படங்களுமே தோல்விப் படங்களாக அமைந்தன.
 
இதனால், கார்த்தி ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தனர். அந்த வருத்தத்தை, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் போக்கியுள்ளது. கடந்த வாரம் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தால், தோல்வியில் இருந்து மீண்டுள்ளார் கார்த்தி.
 
வினோத் இயக்கிய இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் கார்த்தி. அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். ரகுல் நடிப்பில் வெற்றிபெற்ற முதல் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்