ரவிதேஜா ஒரு காலத்தில் தெலுங்கு சினிமாவில் வரிசையாக ஹிட் படங்களாகக் கொடுத்து வந்தார். ஆனால் இடையில் பல சறுக்கல்களை சந்தித்தார். சமீபத்தில் வெளியான டிஸ்கோ ராஜா திரைப்படம் அவருக்கு ஒரு கம்பேக்காக அமைந்தது. அதையடுத்து இப்போது அவர் க்ராக் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் டீசர் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது.
படம் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்பட்ட நிலையில் ரசிகர்கள் ஆர்வமாக திரையரங்குகள் முன்னர் காத்துக் கிடந்தனர். ஆனால் ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தொடுத்த வழக்கில் பேச்சுவார்த்தை முடியாததால் முதல் மூன்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஒரு வழியாக பேச்சுவார்த்தை முடிய மாலை ஆகிவிட்டதால் இரவு 8 மணிக்கு காட்சிகள் தொடங்கின. இதனால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் படம் பார்க்க முடியாமல் திரும்பி சென்றனர்.