தமிழ் சினிமாவில் திரைக்கதைக்காக பேசப்பட்ட படங்களில் ஒன்று விருமாண்டி. ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசோவாவின் பாதிப்பில் அந்த திரைக்கதையை கமல் உருவாக்கி இருந்தார். மிகப்பெரிய பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றது அந்த திரைப்படம். இந்த படத்தில் கமல், பசுபதி, நெப்போலியன் மற்றும் அபிராமி ஆகியோர் தங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த படத்தை கமல்ஹாசனே தயாரித்து இயக்கி இருந்தார். 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இப்படம் ரிலீஸாகி 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்போது அமேசான் ப்ரைம் தளத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதையொட்டி அந்த படத்தின் டிரைலரை இணையத்தில் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்த டிரைலர் இப்போது டிரண்ட்டிங்கில் உள்ளது. இதையடுத்து இப்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் விருமாண்டி படத்தின் மேக்கிங்கைப் பார்த்து ரசித்து ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.