வெளிநாட்டில் ஜோடியா சிக்கிய ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா - உல்லாசம் அம்பலம்!

திங்கள், 2 ஜனவரி 2023 (12:29 IST)
இந்திய சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அறிமுக படமே அவருக்கு விருதுகள் குவித்தது. 
 
அதை தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். விஜய் கீதா கோவிந்தம் படத்தில் நடித்த போதே விஜய் தேவர்கொண்டா மீது காதலில் விழுந்து இருவரும் தனிமையில் சந்திப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தது. அதனால் வேறு நடிகர் ஒருவருடன் திருமணம் நிச்சயதாரம் நடந்தும் ராஷ்மிகாவின் திருமணம் நின்றுவிட்டது. 
பின்னர் இதெல்லாம் வதந்தி. நாங்கள் காதலிக்கவில்லை என்றெல்லாம் கூறினார். ஆனால் தற்போது விஜய் தேவரக்கொண்டா மாலத்தீவில் நீச்சல் குளத்தில் எடுத்த குளியல் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதே நீச்சல் குளத்தில் ராஷ்மிகா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போட்டோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக இருவரும் யாருக்கும் தெரியாமல் ஒன்றாக ஊர் சுற்றிவருவது அம்பலமாகிவிட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்