க்ளாமரில் கலக்கும் ராஷி கண்ணா, தமன்னா..! ‘அச்சச்சோ’ பாடலை ரிலீஸ் செய்து இளைஞர்களை குஷியாக்கிய அரண்மனை 4 படக்குழு!

Prasanth Karthick

ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (10:45 IST)
சுந்தர் சி இயக்கத்தில் தயாராகியுள்ள ‘அரண்மனை 4’ படத்தின் ‘அச்சச்சோ’ பாடலை தமிழ் புத்தாண்டான இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.



சுந்தர்.சி இயக்கிய படங்களில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருவது அரண்மனை பட வரிசைகள். இதற்கு முன்னர் அரண்மனை வரிசையில் 3 படங்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது நான்காவது பாகத்தை இயக்கியுள்ளார் சுந்தர்.சி. இதில் சுந்தர்.சி, தமன்னா, ராஷிக்கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. ஹாரர், காமெடி, ஆக்‌ஷன், க்ளாமர் என அனைத்தையும் கலந்து தனது ட்ரேட்மார்க் மசாலா கமர்ஷியலை படைத்துள்ளார் சுந்தர்.சி. இந்த படத்தில் தமன்னா, ராஷிக் கண்ணா இணைந்து ஆடும் ஒரு க்ளாமர் பாடலின் புகைப்படங்கள் முன்னரே வெளியாகி ரசிகர்கள் இடையே கவனம் பெற்றது.

அந்த ‘அச்சச்சோ’ பாடலை இன்று தமிழ் புத்தாண்டில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமன்னா, ராஷிக்கண்ணாவின் டான்ஸுடன், படத்தின் சில காட்சிகளும் சேர்த்து ப்ரோமாவாக வெளியாகியுள்ள இந்த பாடல் இளைஞர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்