முன் ஜாமின் கேட்ட இயக்குனர் ரஞ்சித் – உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் !

புதன், 12 ஜூன் 2019 (17:00 IST)
ராஜராஜ சோழன் குறித்து அவதூறாகப் பேசியதாக இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் அவர் முன் ஜாமீன் கோரியுள்ளார்.

கடந்த 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்பொது பேசிய ரஞ்சித் மன்னர் ராஜ ராஜ சோழன் காலத்தில்தான் தலித் மக்களின் நிலம் பறிக்கப்பட்டதாகக் கடுமையான விமர்சித்தார். பா. ரஞ்சித்தின் இந்தப் பேச்சுக்கு  சமுக வலைதளங்களிலும் ஆதரவும் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. ரஞ்சித்தின் பேச்சுக்கு இந்து அமைப்புகளும் இந்து மத அபிமானிகளும் வன்மையாகக் கண்டனம் தெரிவித்து அவரைக் கைது செய்ய வேண்டும் எனக் குரல் எழுப்பினர்.

இதையடுத்துக் கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசியதாக பா,.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து ரஞ்சித் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது.

கைது நடவடிக்கைக்கு எதிராக ரஞ்சித் இப்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்