இந்நிலையில் படத்தின் ப்ரமோஷனுக்காக சென்னை வந்த படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய படத்தின் கதாநாயகன் ரன்பீர் கபூர் “நான் சந்தித்த இயக்குனர்களில் மிகவும் ஒரிஜினல் ஆனவர் சந்தீப். ஏன் இப்படி ஒரு கதை என்று அவரிடம் கேட்டேன். ஒருவன் தான் அன்பு வைத்திருப்பவர்களைக் காப்பாற்ற எந்த எல்லை வரை செல்கிறான்? அவனை செலுத்தும் புள்ளி எது? என்பதுதான் கதை என்றார். சொன்னதை அட்டகாசமாக எடுத்துள்ளார். அனிமல் தங்களுடைய உள்ளுணர்வு சொல்லும்படி செயல்படும். அப்படி ஒருவனின் கதை என்பதால் அனிமல் என்று பெயர் வைத்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.