மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற திரைப்படமும், குயின் என்ற இணையத்தளத் தொடரும் வெளியானது. குயின் தொடரில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். தலைவி படத்தை விட குயின் இணையத்தள தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரம்யா கிருஷ்ணன் படப்பிடிப்பு தளத்தில் உள்ள புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு ஆம், ஆம், ஆம் என பதிவிட்டுள்ளார். குயின் இரண்டாம் பாகம் கொரோனா தொற்றின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு தற்போது மீண்டும் துவங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.