ரமணா இயக்கத்தில் தமிழில் அறிமுகமாகும் மஞ்சு வாரியர்
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (18:09 IST)
திருமலை படத்தை இயக்கிய ரமணா தொண்டை புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது குணமடைந்து வண்ணம் என்ற படத்தை இயக்குகிறார்.
அரவிந்த்சாமி, மஞ்சு வாரியர் ஆகியோரை நடிக்க வைக்க வேண்டும் என்பது அவரது திட்டம்.
இது குறித்து அவர் மஞ்சு வாரியரிடம் பேசியுள்ளார். தமிழில் நடிப்பது குறித்து அவர் இன்னும் இறுதி முடிவை சொல்லவில்லை. ஆனாலும், அவர் கண்டிப்பாக வண்ணம் படத்தில் நடிப்பார் என்கிறார்கள்.
விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.