சென்சாரின்போது சர்ச்சைக்குரிய 14 காட்சிகளை வெட்டினால் 'யூஏ' சான்றிதழ் தருவதாகவும், இல்லையென்றால் 'ஏ' சர்டிபிகேட் தருவதாகவும் சென்சார் அதிகாரிகள் கூறினர். ஆனால் படக்குழுவினர் எந்த காட்சியையும் வெட்டக்கூடாது என்று கூறி 'ஏ' சர்டிபிகேட்டை பெற்றுள்ளனர்.
ஆண்ட்ரியா, வசந்த் ரவி, அழகம் பெருமாள் மற்றும் அஞ்சலி நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூலையில் வெளியாகவுள்ளது.