சிரஞ்சீவியின் வெற்றியை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகள்… ராம்கோபால் வர்மா சர்ச்சை டிவீட்!

புதன், 25 ஆகஸ்ட் 2021 (10:24 IST)
தெலுங்கு சினிமாவில் சர்ச்சைகளுக்கு பேர்போனவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. அவரின் தாக்குதல்களுக்கு ஆளாகாத பிரபலங்கள் வெகு சிலரே.

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அதில் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. அதில் சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினரான அல்லு அர்ஜுன் மட்டும் கலந்து கொள்ளாதது பல கேள்விகளை எழுப்பியது.

இதுபற்றி பேசியுள்ள சர்ச்சை மன்னன் ராம்கோபால் வர்மா ‘ அல்லு அர்ஜுனின் புத்திசாலி தனம். அவர் தானாக உருவான ஸ்டார். அவரால் மற்ற ஒட்டுண்ணிகளால் சேர முடியாது. இவர்கள் அனைவரும் மெகா ஸ்டாரின் வெற்றியை உறிஞ்சு வாழும் ஒட்டுண்ணிகள்.’ எனக் குறி திரியைக் கொளுத்திப் போட்டுள்ளார்.

அதே போல மற்றொரு டிவீட்டில் ‘மெகா ஸ்டாருக்குப் பிறகு அல்லு அர்ஜுன் மட்டும்தான் இப்போதைய மெகா ஸ்டார்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்