ஓடிடி படத்துக்காக 233 கோடி சம்பளம் வாங்கிய டிகாப்ரியோ!

புதன், 25 ஆகஸ்ட் 2021 (10:16 IST)
நடிகர் லியனார்டோ டி காப்ரியோ நெட்பிளிக்ஸ் தளத்துக்காக டோண்ட் லுக் அப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நெட்பிளிக்ஸ் தளம் நேரடியாக படங்களை உருவாக்கி தங்கள் தளத்திலேயே ரிலிஸ் செய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நெட்பிளிக்ஸின் நேரடிப் படமான தி ஐரிஷ்மேன் திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் இப்போது லியனார்டோ டி காப்ரியோ நடிப்பில் டோண்ட் லுக் அப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்காக அவர் இந்திய மதிப்பில் 232 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஆண்டி மெக்கே இயக்கும் இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்