மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பான கதையை மையமாகக் கொண்டு சில படங்கள் வெளியாகி உள்ளன. இப்போது மீண்டும் அதே கொலை வழக்கை மையப்படுத்தி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ஒரு படம் தயாராகிறது.
ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான கதைதான் இப்படத்தின் கதை. எனவே, நாடு முழுவதும் இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.