ரஜினியின் 2.0 செய்த சாதனை - 10 ஆயிரம் தியேட்டரில் வெளியீடு

வியாழன், 22 நவம்பர் 2018 (13:02 IST)
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் கிட்டத்தட்ட 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் ஒன்றுகூடி நடித்துள்ள படம் 2.0.
 
இந்த படம்  தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என்று பல மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 
 
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 
 
இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால், 2.0 படம் வெளியாகும் போதே மிகப்பெரும் சாதனையுடன் வெளியாகிறது. ஆம், இதுவரை எந்தப் படமும் வெளியாகாத அளவிற்கு கிட்டத்தட்ட 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில் வந்த தளபதி படம் வெளிநாடுகளில் 100 திரையரங்குகளில் வெளியானது. அடுத்து வந்த சிவாஜி படம் 1000 திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஹாலிவுட் படங்களைப் போன்று ஐமேக்ஸ் திரையரங்குகளில் 2.0 படத்தை திரையிட ஒப்பந்தம் செய்துள்ளனர். கிட்டத்தட்ட ரூ.600 கோடி செலவில் தயாரான நேரடி தமிழ் படம். முதல் முறையாக இப்படத்தை 3டி கேமராவில் முழு படத்தையும் படமாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள 2.0 மக்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. .

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்