ரஜினியின் முடிவால் கொக்கி போடும் மற்றக் கட்சிகள்… அடுத்து இருக்கு ஒரு பிரச்சனை!

செவ்வாய், 29 டிசம்பர் 2020 (17:09 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் தேர்தல் காலத்தில் அவருக்கு மேலும் ஒரு பிரச்சனை உள்ளது.

ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த கட்சி தொடர்பான பணிகளில் தீவிரமாக இறங்கிய நிலையில் தற்போது உடல்நல குறைவால் ஓய்வில் உள்ளார். எனினும் கட்சி பெயர், சின்னம் உள்ளிட்டவை திட்டமிட்டபடி அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், தன்னால் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலை எதிர்கொள்ள முடியவில்லை என்றும், அதனால் அரசியல் கட்சி தொடங்குவதை கை விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதை மிகவும் மன வேதனையுடன் அறிவிப்பதாக கூறியுள்ள அவர் தன்னை நம்பி உள்ளவர்களை படுகுழியில் தள்ள விரும்பவில்லை என்றும், தன்னாலான உதவிகளை மக்களுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு செய்வதாகவும் கூறியுள்ள அவர், அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதனால் ரஜினிகாந்துக்கு கட்சி தொடங்க சொல்லி கொடுக்கப்பட்ட அழுத்தத்தை அவர் சமாளித்துவிட்டார் என சொல்லப்படுகிறது. ஆனாலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் அரசியல் ஆசையில் காத்திருக்கின்றனர். அவர்களின் வாக்குகளை எப்படியும் தாம் வாங்க வேண்டும் என மற்ற அரசியல் கட்சிகள் முயற்சி செய்யும். அதனால் தேர்தல் நேரத்தில் தங்கள் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என ரஜினியிடம் வேண்டுகோள் வைக்க வாய்ப்புள்ளது. இதனால் அந்த பிரச்சனையை ரஜினி எப்படி எதிர்கொள்ள போகிறார் என்ற கேள்வி உள்ளது. ஏற்கனவே 1996 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்