ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் அப்டேட்!

சனி, 23 டிசம்பர் 2023 (10:12 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடக்க, இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் படமாக்கப்பட்டது. அங்கே அமிதாப் பச்சன் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. அதையடுத்து இப்போது சென்னையில் இந்த படத்தின்  பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சில நாட்கள் இந்த படத்தின் ஷூட்டிங்குக்கு பிரேக் விடப்பட்டிருந்த நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து சில வாரங்கள் நடக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் முடியவுள்ளதாக சொல்லப்படுகிறது. வேட்டையன் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்