ரஜினி படத்தில் நடிக்க மறுத்த ஷாருக் கான்… இதுதான் காரணமா?

செவ்வாய், 19 டிசம்பர் 2023 (07:07 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதையடுத்து இப்போது பிரபல நடிகர் ஜீவனும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்த படத்தின் வில்லனாக ஜீவன் நடிக்க உள்ளதாக ரசிகர்கள் விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த படத்தின் திரைக்கதைப் பணிகளை இப்போது தொடங்கியுள்ள இயக்குனர் லோகேஷ், இந்த படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க, ஷாருக் கானை அணுகி பேசியுள்ளாராம். ஆனால் பல படங்களில் கௌரவ வேடத்தில் நடித்துவிட்டதால், தனது ரசிகர்களுக்கு அது பிடிக்காமல் போய்விட்டது என நாசூக்காக மறுத்துவிட்டாராம் ஷாருக். அதனால் இப்போது அந்த வேடத்தில் ரண்வீர் சிங்கை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்