அண்ணாத்த படத்தை முடிந்த நிலையில் ரஜினிகாந்த் அடுத்த படத்துக்கான கதைக் கேட்டல் மற்றும் தயாரிப்பு நிறுவன்ம் ஆகியவற்றில் இறங்கியுள்ளார். அந்த படத்தை இயக்க தேசிங் பெரியசாமி ஒப்பந்தம் ஆக, தயாரிக்க ஏஜிஎஸ் நிறுவனம் ஒப்பந்தம் ஆகியதாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து விறுவிறுவென திரைக்கதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டார் இயக்குனர். ஆனால் இப்போது படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்குக் காரணம் படத்தில் இடம்பெறும் ஒரு பிளாஷ்பேக் காட்சியை படமாக்க எக்கச்சக்கமாக செலவாகும் என தயாரிப்பு நிறுவனம் அஞ்சுகிறதாம். ரஜினி சம்பளத்தோடு படத்தின் பட்ஜெட் எல்லாம் சேர்த்தால் 200 கோடிக்கு மேல் செல்ல அதை திரும்ப எடுக்க முடியுமா என்ற குழப்பத்தில் இருப்பதால் இப்போதைக்கு படத்தின் வேலைகளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ரஜினியை நம்பி எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், ஆனால் ஒரு படம் மட்டுமே இயக்கிய இயக்குனரை எந்த அளவுக்கு நம்பலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாம். இதனால் ரஜினி இப்போது லைகாவுக்கு அந்த கதையை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.