ரஜினி பட ’’வில்லன் நடிகர் ’’ரூ. 25 கோடி தாராள நிதி உதவி ! ரசிகர்கள் பாராட்டு !

சனி, 28 மார்ச் 2020 (18:07 IST)
சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது.  இதுவரை இந்த நோயால் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.  இந்தியாவில் ஊரங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகிறது. சீனாவை அடுத்து அதிக மக்கள் தொகை (138 கோடி ) பரப்பளவு கொண்ட இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு என்பது ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினக்கூலிகளாக உள்ள மக்கள் மற்றும் அதிக அளவில் பணியில் ஈடுபடும் கட்டிய தொழிலாளர்கள், குழந்தைகள் போன்றவர்கள் உணவுக்கு கஷ்டப்படும்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களின் பசி பட்டிணியையும் , வேலையில்லாத தொழிலாளர்களின் நிலைமையைச் சமாளிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல நல்ல முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் நிவாரண பொருட்களும் நிதி உதவியும் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும்  அவரது மகன் ராம்சரணும் நிதி உதவி வழங்கிய நிலையில் , சிரஞ்சீவியின் தம்பியும்  ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் பவன் கல்யான் ரூ.2 கோடி உதவி அளித்துள்ளார்.  அதில், ஆந்திரா  தெலுங்கான மாநிலங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் அளிப்பதாகவும்,மேலும்  ரூ. 1 கோடி நிதியை பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.  கிரிக்கெட் வீரர் தோனி ரூ. 1 லட்சம் ரூபாயும், நடிகர் பிரபாஸ் ரூ. 4 கோடியும் , நடிகர் அல்லு அர்ஜூன் ரூ. 1.25 கோடி கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில்,  பிரபல ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார் கொரோனா தடுப்புக்காக தனது சேமிப்பில் இருந்து ரூ. 25 கோடியை பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரதமர் மோடி, தாராளமாக நிதி உதவி வழங்க கோரியிருந்த நிலையில் நடிகர் அக்‌ஷய் குமார். ரூ. 25 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

This is that time when all that matters is the lives of our people. And we need to do anything and everything it takes. I pledge to contribute Rs 25 crores from my savings to @narendramodi ji’s PM-CARES Fund. Let’s save lives, Jaan hai toh jahaan hai.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்