மறுபடியும் ஒரு தடவ அந்த ரஜினிய பாக்கணும்… 41 ஆண்டுகளைக் கடந்த படம்!

திங்கள், 14 செப்டம்பர் 2020 (18:28 IST)
நடிகர் ரஜினிகாந்தின் சிறந்த படங்களில் ஒன்றான ஆறிலிருந்து அறுபவது வரை வெளியாகி 41 ஆண்டுகள் ஆகியுள்ளன.

ரஜினி இன்றைக்கு உலக சினிமா ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார். அவர் திரையில் வந்தாலே விசில் சத்தம் காதைப் பிளக்கும். ஆனால் ரஜினி சூப்பர் ஸ்டாராக ஆவதற்கு முன்னர் அவர் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்த காலம் ஒன்று இருந்தது. அப்போது கதையின் நாயகனாக இல்லாமல் கதாபத்திரமாக பல நல்ல படங்களில் நடித்து வந்தார் ரஜினி.

அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் ஆறிலிருந்து அறுபவது வரை. எந்த அலட்டலும் ஸ்டைலும் இல்லாமல் குடும்ப பொறுப்பை தாங்கும் அண்னனாகவும், துரோகங்களால் வஞ்சிக்கப்படுபவராகவும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ரஜினிகாந்த். இந்த படத்தை ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான எஸ் பி முத்துராமன் தன் வழக்கமான பாணியில் இருந்து விலகி இயக்கி இருப்பார். இந்த படம் வெளியாகி இன்றோடு 41 ஆண்டுகளைக் கடந்தாலும் இணையதளங்களில் இளம் தலைமுறை ரசிகர்களால் இன்னமும் பார்க்கப்பட்டு வருவதே அதற்கான கிரீடமாகும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்