ரஜினி, கமல் பட தயாரிப்பாளர் தவறி விழுந்து கை, கால் முறிவு
சனி, 13 மே 2023 (15:34 IST)
தமிழ் சினிமாவில் பழம்பெரும் தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு குளியறையில் தவறி விழுந்து கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில், நடிகர் கமல், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 16 வயதினிலே. இப்படத்தை தயாரித்தவர் எஸ்.ஏ.ராஜ்கண்னு.
இதையடுத்து, இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் நடித்த கன்னி பருவத்திலே, தெலுங்கு சினிமா நடிகர் சுதாகர் மற்றும் ராதிகா நடிப்பில் வெளியான கிழக்கே போகும் ரயில், பாண்டியன், ரேவதி நடிப்பில் வெளியான பொண்ணு புடிச்சிருக்கு உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருக்கிறார்.
இவர் கடைசியாக தயாரித்த படம் கமல், சுகன்யா நடிப்பில் வெளியான மகாநதி ஆகும்.
தற்போது 77 வயதாகும் எஸ்.ஏ ராஜ்கண்னு தாம்பரம் அருகேயுள்ள சிட்லபாக்கத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், தன் வீட்டில் குளியறையில் எஸ்.ஏ.ராஜ்கண்னு தவறி விழுந்தார். இதில், அவரது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து, அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இவரது சிகிச்சைக்கு, நடிகர் ராஜேஷ், நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது,