தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா? ஜெயிலர் வசூல் மழை

சனி, 2 செப்டம்பர் 2023 (08:02 IST)
ரஜினியின் தர்பார் மற்றும அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால் ஜெயிலர் படத்துக்கு அவருக்கு சம்பளம் குறைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் ரிலீஸ் ஆன ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. உலகளவில் திரையரங்கில் 525 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வசூலில் மைல்ஸ்டோன் படைத்து வரும் ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் திரையரங்குகள் மூலமாக மட்டும் 185 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து முதலிடத்தில் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்