அடுத்த ரஜினி படத்துக்கு இசையமைக்கிறாரா இளையராஜா?

திங்கள், 20 டிசம்பர் 2021 (15:31 IST)
ரஜினி அடுத்து நடிக்கும் படத்தை இயக்கப் போவது யார் என்ற குழப்பம் இன்னமும் நீடித்து வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதையடுத்து உடனடியாக ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால் பல இயக்குனர்களிடம் கதைக் கேட்டு வருகிறாராம்.

அந்த இயக்குனர்கள் பட்டியலில் இப்போது பாலிவுட் இயக்குனரான பால்கியின் பெயரும் இருக்கிறதாம். பால்கி சொன்ன கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பால்கி இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்தால் சிறப்பாக இருக்கும் எனக் கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை அடுத்தகட்டத்தை எட்டினால் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி – இளையராஜா காம்பினேஷன் மீண்டும் உருவாக வாய்ப்புள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்