ராமர் கோயிலுக்குச் செல்லும் நடிகர் ரஜினிகாந்த்

சனி, 19 ஆகஸ்ட் 2023 (12:55 IST)
ரஜினிகாந்த் தனது ஆன்மிக பயணத்தில் நாளை அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில்  நெல்சன் இயக்கத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான படம் 'ஜெயிலர்'. இப்படம் மிகப்பெரிய எதிர்பபார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

அத்துடன் வசூல் சாதனையும் படைத்து வருகிறது.  ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வாரம் வியாழன் அன்று வெளியான  நிலையில் ஒரு வாரத்தில் 375.40 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

இதையடுத்து, சென்னை, பிரசாத் லேப்பில் 'ஜெயிலர்' படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழுவினர் ஈடுபட்டனர்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக சுற்றுப்பயணம் வட இந்தியாவில் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து 'ஜெயிலர்' படம் பார்க்க உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேலுடன் நடிகர் ரஜினிகந்த் மரியாதை நிமித்தமான சந்தித்துள்ளார்.

மேலும், ஆன்மிக பயணத்தில் நாளை அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்யவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்