நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று சென்னையில் உள்ள அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து 5 நாட்களுக்கு அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று திண்டுக்கல், கரூர், கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்ட ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
ரஜினியுடன் அவருக்கு சினிமா உலகில் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்த இயக்குனர் முத்துராமனும் வந்திருந்து பேசினார். அப்போது முத்துராமன் பேசுகையில், ''ரஜினி என்றுமே கேமராவுக்கு பின்னர் என்றுமே நடித்ததில்லை. ஸ்டைலுடன் கூடிய ஸ்பீடான நடிப்பை ரசிகர்களுக்கு பிடித்த வகையில் நடிக்கக் கூடியவர் ரஜினி.