மீண்டும் ரஜினி பக்கம் சென்ற இயக்குனர்… கதவை சாத்திய சூப்பர் ஸ்டார்!

செவ்வாய், 4 மே 2021 (14:03 IST)
ரஜினியை வைத்து தர்பார் என்ற அட்டர் ப்ளாப் படத்தைக் கொடுத்த இயக்குனர் முருகதாஸ் மீண்டும் ரஜினிக்கே கதை தயார் செய்ததாக சொல்லப்பட்டது.

இயக்குனர் முருகதாஸ் விஜய்க்கு துப்பாகி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களை கொடுத்து அவரின் மார்க்கெட்டை விரிவாக்கிய இயக்குனர்களில் ஒருவர். அவர்கள் இருவரும் நான்காவது முறையாக இணைய இருந்த நிலையில் சில பல காரணங்களால் அது தடைபட்டது. இப்போது விஜய்யின் அடுத்த படத்தை நெல்சன் இயக்க உள்ளார்.

இந்நிலையில் முருகதாஸ், இப்போது அடுத்த ஹீரோவுடன் கூட்டணி சேரலாம் எனக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக அவர் இயக்கிய தர்பார் படம் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதனால் எப்படியாவது ரஜினிக்கு ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்று அவருக்கே கதை தயார் செய்யலாம் என முடிவு செய்து ரஜினி தரப்பை தொடர்புகொண்டுள்ளார். ஆனால் அங்கிருந்து ரிப்ளேயே வரவில்லையாம். ஏன்னா  தர்பார் பஞ்சாயத்து அப்படி என சொல்கிறார்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்