பல வருடங்களுக்கு பிறகு மோதிக் கொள்ளும் ரஜினி சிரஞ்சீவி படங்கள்!
புதன், 1 செப்டம்பர் 2021 (16:06 IST)
ரஜினி நடிக்கும் அண்ணாத்த திரைப்படமும் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படமும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரிலிஸ் செய்ய முயற்சிகள் மேற்கொள்ள உள்ளனர்.
ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாவது உறுதியாகியுள்ளது. அதே போல தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் ஆச்சார்யா திரைப்படமும் அதே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது.
ரஜினி படங்களுக்கு தெலுங்கில் எப்போதுமே மிகப்பெரிய சந்தை மதிப்பு உண்டு. அண்ணாத்த திரைப்படம் தெலுங்கு டப்பிங் பணிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் இரண்டு சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.