பாகிஸ்தான் செல்லும் ராஜமெளலி: இந்தியர்கள் மகிழ்ச்சி

புதன், 28 மார்ச் 2018 (15:50 IST)
பாகுபலி படத்தை பாகிஸ்தான் சினிமா விழாவில் திரையிடுவதால் இயக்குனர் ராஜமெளலிக்கு  அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

 
 
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ரானா டகுபதி, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்த பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்றிருந்த நிலையில், பாகுபலி 2 படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உலக அளவில் சினிமா ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமில்லாமல் 1500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
 
இதனையடுத்து, ராஜமௌலி ஜீனியர் என்.டி.ஆர், ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இந்த நிலையில் பாகுபலி திரைப்படம் பாகிஸ்தான் சினமா விழாவில் திரையிடப்படவுள்ளது.
 
இது குறித்து இயக்குனர் ராஜமெளலி தனது டுவிட்டர் பக்கத்தில், பாகுபலி திரைப்படத்தால் நான் பல நாடுகளுக்கு பயணம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.. அதிலும் பாகிஸ்தானுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் மிகவும் உற்சாகமாக உள்ளேன். என்னை பாகிஸ்தான் சினிமா விழாவுக்கு அழைத்ததற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்