இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது ‘ஆலிஸ்’ என்ற படத்திலும் ஜிவி பிரகாஷுடன் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது, படுகவர்ச்சியாக புகைப்படமொன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு “Call me on my landline” என கூறியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் நம்பர் கொடுங்கள் என கேட்டு தொல்லை செய்து வருகின்றனர். சும்மாவே விடமாட்டாங்க இப்படியெல்லாம் சொன்னீங்கனா எப்படி...? என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.