கிரிஞ்ச் இயக்குனரோடு கைகோர்க்கும் ராகவா லாரன்ஸ்!

புதன், 19 ஜனவரி 2022 (11:00 IST)
இயக்குனர் மற்றும் நடிகரான ராகவா லாரன்ஸ் அடுத்து பூமி படத்தின் இயக்குனர் லஷ்மன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் லஷ்மன் ஜெயம் ரவி நடிப்பில் ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்தார். அதையடுத்து அவர்கள் இருவரும் இணைந்து வெளியான பூமி திரைப்படம் படுதோல்வி அடைந்தது. நேரடியாக ஓடிடியில் வெளியான இந்த படம் வாட்ஸாப் பார்வேடு மெஸேஜ்களை வைத்து உருவாக்கப்பட்டதாக பயங்கர கிண்டல்களையும், விமர்சனங்களையும் சந்தித்தது. அதிலும் குறிப்பாக இயக்குனர் லஷ்மன் ரசிகர்களால் வைத்து செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த இயக்குனர் லஷ்மனோடு அடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளாராம். இதற்கான வேலைகள் இப்போது தொடங்கியுள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்