ரஜினியை தீபாவின் கணவருடன் ஒப்பிட்டு நக்கலடிக்கும் ராதாரவி!

வியாழன், 18 மே 2017 (16:41 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள் என அவரே கூறியுள்ளார். 9 வருடங்களுக்கு பின்னர் ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி சொன்ன தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்த சூசக தகவல்தான் இது.


 
 
இதனையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு பிரபலங்களும், நடிகர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்தை கூறி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராதாரவியிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு பதில் அளித்த ராதாரவி தீபாவின் கணவர், டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது ரஜினிகாந்த் வருவதில் தவறில்லை என நக்கலாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்களிடம் பணம், புகழ் இரண்டையும் அதிகமாக சம்பாதித்துள்ளார் என பொடி வைத்தவாறே பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்