சமச்சீர் கல்வியை கிண்டலடித்த ஆர்.ஜே.பாலாஜி - பொங்கியெழுந்த நெட்டிசன்கள்

புதன், 17 மே 2017 (10:35 IST)
சமச்சீர் கல்வியில் படிக்கும் மாணவ, மாணவிகளை கிண்டலடிக்கும் வகையில் ரேடியோ தொகுப்பாளரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ள கருத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


 

 
அதாவது, சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்இ ஆகிய பாடத்திட்டங்களில் படித்து வரும் இரண்டு மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை பார்க்கும், சமச்சீர் கல்வி மாணவர், “மச்சி அங்க பாரேன் ரெண்டு பாரீன்காரங்க” என கூறுவது போல், தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் ஒரு டிவிட் செய்திருந்தார்.


 

 
இதைக் கண்ட நெட்டிசன்கள் பொங்கி எழுந்து விட்டனர். தமிழகத்தில் 90 சதவீதம் மாணவ, மாணவிகள் சமச்சீர் கல்வியில்தான் படிக்கின்றனர். அதுவே எல்லோருக்கும் சமமான கல்வி. ஆர்.ஜே. பாலாஜி பாஜகவிற்கு ஒத்து ஊதுகிறார். இனிமேல், அவர் ஆங்கில ரேடியாவில் நிகழ்ச்சி நடத்தட்டும் என ஏகத்திற்கும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



















வெப்துனியாவைப் படிக்கவும்