உருவாகிறது புத்தம் புது காலை சீசன் 2!

புதன், 22 செப்டம்பர் 2021 (10:19 IST)
கொரோனா காலத்தில் நம்பிக்கையை விதைக்கும் விதமாக உருவாக்கப்பட்ட புத்தம் புது காலை ஆந்தாலஜியின் இரண்டாவது சீசன் உருவாக உள்ளது.

கொரோனா முதல் லாக்டவுன் போது நம்பிக்கையை விதைக்கும் விதமாக சில குறும்படங்கள் இணைந்த ஆந்தாலஜியாக புத்தம் புது காலை அமேசான் ப்ரைமில் ரிலிஸ் ஆனது. இதில் உள்ள படங்களை கார்த்திக் சுப்பராஜ், சுஹாசினி, ராஜீவ் மேனன் மற்றும் சுதா கொங்கரா உள்ளிட்டோர் இயக்கி இருந்தனர்.

இந்த படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் இப்போது இதன் அடுத்த சீசன் உருவாக உள்ளதாம். இதில் ஒரு படத்தை பாலாஜி மோகன் இயக்க உள்ளார். அதற்கான வேலைகளில் இப்போது இறங்கியுள்ளார். மற்ற இயக்குனர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்