எதற்கும் துணிந்தவன் டீசர் ரிலீஸ் எப்போது?

புதன், 1 டிசம்பர் 2021 (16:33 IST)
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் குறித்த வேலைகள் இப்போது நடந்து வருகின்றன.

சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன் தினம் வெளியானது. படம் அதிகாரப்பூர்வமாக பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் டீசரை ஆங்கில புத்தாண்டு தினத்தன்று வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொள்ளாச்சி சம்பவம் பற்றிய காட்சிகள் படத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்