ரிலீஸான எட்டே நாட்களில் ஓடிடியில் ரிலீஸ்: அதிர்ச்சியில் திரையரங்க உரிமையாளர்கள்

வியாழன், 8 ஏப்ரல் 2021 (13:26 IST)
ரிலீஸான எட்டே நாட்களில் ஓடிடியில் ரிலீஸ்
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படம் ரிலீஸான 16 நாட்களில் ஓடிடியில் வெளியானது என்பது தெரிந்ததே/ இதனால் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இந்த நிலையில் மாஸ்டர் படத்தை மிஞ்சும் வகையில் சூப்பர் ஸ்டார் நடிகர் படம் ஒன்று திரையரங்குகளில் வெளியான எட்டே நாட்களில் ஓடிடியில் வெளியாகியுள்ளது 
 
கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மற்றும் சாயிஷா நடிப்பில் உருவான திரைப்படம் யுவரத்னா. இந்த படம் ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது/ இந்த அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

சென்னை பெங்களூரு உள்பட பல நகரங்களில் இந்த படத்திற்கு இன்னும் அதிக அளவில் ரசிகர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென ஓடிடியில் ரிலீஸ் என்ற அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் கர்நாடக மாநிலத்தை 50 சதவீதம் மட்டுமே திரையரங்குகளில் அனுமதி என்ற உத்தரவு வந்ததை அடுத்து இந்த முடிவை படக்குழுவினர் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்