கே.ஜி.எஃப்க்கு நிகரான சாதனையை படைத்த ஜேம்ஸ்! – ரசிகர்கள் கொண்டாட்டம்!

திங்கள், 4 ஏப்ரல் 2022 (16:10 IST)
புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ் கன்னடத்தில் பெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது.

கன்னட திரைப்பட உலகின் ஸ்டார் நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். கடந்த ஆண்டு திடீர் மாரடைப்பால் புனித் ராஜ்குமார் மறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவரது கடைசி படமான ஜேம்ஸ் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

சேத்தன் குமார் இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிந்திருந்த நிலையில் புனித் ராஜ்குமார் உயிரிழந்ததால் அவருக்கு பதிலாக அவரது அண்ணன் சிவராஜ் சிவகுமார் டப்பிங் பேசினார். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மார்ச் 17 புனித் ராஜ்குமார் பிறந்தநாள் அன்று வெளியானது.

வெளியானது முதல் பெரும் வசூலை இந்த படம் பல மொழிகளிலும் குவித்துள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி கன்னடத்தில் மட்டும் ஜேம்ஸ் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது. கன்னடத்தில் ரூ.100 கோடி வசூல் செய்த இரண்டாவது படமாக ஜேம்ஸ் உள்ளது. முன்னதாக கேஜிஎஃப் முதல் பாகம் 100 கோடி வசூல் செய்தது சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்