கட்அவுட்கள், போஸ்டர்கள் என்று தமிழகமெங்கும் கொண்டாட்டங்கள் சூடுபிடித்த நிலையில், இன்று அதிகாலை திரையிடுவதாக இருந்த 5 மணி சிறப்புக் காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து காலை எட்டுமணி காட்சியும் சில திரையரங்குகளில் ரத்து செய்யப்பட்டது. ஏன் புலி திரையிடல் ரத்து செய்யப்பட்டது என்பது தெரியாத நிலையில், இன்று படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற குழப்பம் ரசிகர்களிடையே நிலவுகிறது.