பாலியல் தொல்லை தருவது என்பது ஒன்றும் புதுசு இல்லை: ஆவேசப்படும் நடிகைகள்!

புதன், 22 பிப்ரவரி 2017 (11:13 IST)
நடிகை பாவனா கடந்த 17ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு வந்தபோது அவரை 3 பேர் காரில் கடத்தி 2 மணிநேரமாக மானபங்கப்படுத்தினர். பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி அதனை வீடியோவாகவும் எடுத்தனர் என்ற செய்தி திரையுலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
பெண்கள் மீதான பாலியல் வன்முறை இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பாலியல் வன்முறை குறித்து பேசிய  வரலட்சுமி சரத்குமார் தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு பற்றியும் தெரிவித்தார். பிரபல தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சி  தயாரிப்பு பிரிவு தலைவர் தவறாக பேசியுள்ளதையும் அம்பலப்படுத்தினார். மேலும் என் அப்பா பெரிய நடிகராக இருந்துமே  எனக்கு இந்த நிலைமை. இது போன்ற சம்பவங்கள் சினிமா துறையில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் நடக்கிறது  என்கிறார் வரலட்சுமி.
 
இதனை தொடர்ந்து பெண்களிடம் தவறாக நடப்பவர்களை தண்டிக்க ஒரு இயக்கத்தை துவங்க திட்டமிட்டுள்ளேன். ஒரு பெண் அல்லது குழந்தையை பலாத்காரம் செய்வது தண்டனைக்குரியது அல்ல என்று ஆண்கள் நினைக்கிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பையும், அவர்களை ஒழுங்காக நடத்தவும் ஆண்களுக்கு வீட்டில் சொல்லி தரவேண்டும். இந்த குற்றத்திற்கு  மரண தண்டனை விதிக்க வேண்டும் என வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
 
பாவனா பாலியல் வன்முறை குறித்து த்ரிஷா பேசுகையில், என் சக நடிகைகளுக்கு இது போன்று நடப்பது கவலை  அளிப்பதோடு கோபமாக வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். 
 
திரையுலகினர் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நடிகை ராய் லட்சுமி இது குறித்து கூறிகையில், பெண்கள்  அட்ஜெஸ் செய்து போவது சினிமாவில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் உள்ளது. இது போன்ற விஷயங்கள் குறித்து  துணிச்சலாக பேசினால் தான் தீர்வு கிடைக்கும். வரலட்சுமி தைரியமாக தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்தது  பாராட்ட வேண்டிய செயல் என ராய் லட்சுமி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்